இனி 24 மணி நேரமும் பிக்பாஸ்: பிரத்யேக ஓடிடி சேனல் ஆரம்பம்!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நேற்று நிறைவு பெற்றது என்பதும் இதில் டைட்டில் வின்னர் ஆக ராஜூ தேர்வு செய்யப்பட்டார் என்பதும் இரண்டாவது இடத்தை பிரியங்கா பெற்றார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நேற்றைய இறுதி போட்டி நிகழ்ச்சியில் கமல்ஹாசன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாக உள்ள பிரத்யேக ஓடிடி சேனல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் அல்டிமேட் சேனலில் இதுவரை ஐந்து சீசன்களில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசனே தொகுத்து வழங்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

13 போட்டியாளர்களுடன் 48 நாட்கள் ஒளிபரப்பாகும் இந்தச் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் என்றும், இந்த நிகழ்ச்சிக்கான போட்டியாளர்கள் தேர்வு மற்றும் செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்த நிகழ்ச்சி ஜனவரி இறுதி வாரத்தில் ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த அறிவிப்பு பிக்பாஸ் ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.