பெண்களின் திருமணம் ஓவியாவின் கருத்து
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதிக ரசிகர்களை கவர்ந்தவர் என்றால் அது ஓவியா தான். படங்களில் கவர்ச்சியாக நடித்த போது கூட பிரபலமாகாத ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்.
அதன்பின் அவருக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு பெருகியது. அவ்வப்போது ‘நறுக்’ என்று பதிவிடும் ஓவியா, தற்போதும் சென்சிடிவான டாபிக்கில் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தப் போவதாக அன்மையில் மத்திய அரசு சட்ட மசோதா உருவாக்கியுள்ளது.
இதற்கு ஆதாவு தெரிவித்துள்ள ஓவியா, ‘பெண்ணின் திருமண வயதை உயர்த்துவது சரியான முடிவு தான்.இதற்கு மனபூர்வமாக நான் ஆதரிக்கிறேன். பெண்கள் தங்களுடைய படிப்பு, கனவு, வேலை என பல விஷயங்களை தியாகம் செய்ய தேவையில்லை’ என பதிவிட்டுள்ளார்.
ஓவியாவின் இந்த கருத்துக்கு நெட்டீசன்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Increasing #MarriageAge is a right decision! You don’t need to sacrifice many things and take very big responsibilities at an early age! I strongly support 👍
— Oviyaa (@OviyaaSweetz) January 12, 2022