பொங்கல் – புதிய படங்கள் வெளிவர குறையும் வாய்ப்புகள்

இந்த வருட துவக்கமே இந்தியாவில் கொரோனாவின் மூன்றாவது அலையுடன் ஆரம்பமாகியுள்ளது.

இதன் காரணமாக பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கு என அமல்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என பல மாநிலங்கள் அறிவித்துவிட்டதை, தொடர்ந்து பல மாநிலங்களில் புதுப்புது கொரோனா கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள்.

இந்த ஆண்டின் முதல் பெரிய திரைப்படமாக இந்த வாரம் ஜனவரி 7 ஆம் திகதி வெளிவர இருந்த ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தைத் தள்ளி வைத்துவிட்டார்கள். இந்த பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ராதேஷ்யாம்’ திரைப்படம் ஜனவரி 14 ஆம் திகதியன்று வெளியாகும் என்று நேற்று வரை தகவல்கள் வெளிவந்தன.

நாளுக்கு நாள் கொரோனா நோய் பாதிப்புகள் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள பல திரைப்படங்கள் திட்டமிட்டபடி வெளிவர வாய்ப்பில்லை என்பது தான் தற்போதைய சூழ்நிலையாக உள்ளது.

‘ராதேஷ்யாம், வலிமை மற்றும் வீரமே வாகை சூடு’ ஆகிய திரைப்படங்கள் வருகின்ற பொங்கல் வெளியீடு என அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றைத் தள்ளி வைக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகின்றது. இது குறித்தான அறிவிப்புக்கள் மிக விரைவில் வெளியாகலாம் என எதிரப்பார்க்கப்படுகின்றது.