வலிமை குறித்து சிவகார்த்திகேயன்

0

வலிமை திரைப்படத்தினை குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது நடிகர் அஜித் ரசிகர்கள் மத்தியில் தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது.

சென்னையில் நேற்று நடந்த RRR படத்தின் ஊடக சந்திப்பு நிகழ்ச்சியில் பல சினிமா பிரபலங்கள் மற்றும் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழ் நடிகர்களான சிவகார்த்திகேயன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் போன்ற பலரும் கலந்துகொண்டு மேடையில் கலகலப்பாக பேசினார்கள்.

இதன் போது பேசிய சிவகார்த்திகேயன் 2022 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே இந்த படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கப் போகின்றது அதுமட்டுமில்லாமல், நடிகர் அஜித்தின் வலிமையும் வரப்போகிறது. இந்த திரைப்படத்தை எல்லாம் மக்கள் திரையரங்கில் வந்து பார்த்தால், அதன் பிறகு திரைப்படம் பார்க்க வரும் மக்கள் கண்டிப்பாக எங்கள் திரைப்படங்களையும் ஏற்றுக்கொள்வார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.