ராஷ்மிகாவின் ஆபாச காட்சிகள் ; அதிரடியாக நீக்கம்

0

தமிழில் நடிகர் கார்த்தி ஜோடியாக சுல்தான் திரைப்படத்தில் நடித்து பிரபலமான நடிகை ராஷ்மிகா தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். தற்போது இரண்டு இந்தி திரைப்படங்களிலும், ஒரு தெலுங்கு திரைப்படத்திலும் அவர் நடித்து வருகிறார்.

நடிகர் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள புஷ்பா திரைப்படம் சமீபத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் திரையரங்குகளில் திரைக்கு வந்து சிறப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்த திரைப்படத்தில் எல்லை மீறிய சில ஆபாச காட்சிகள் இருப்பதாக சர்ச்சைகள் திரைப்பட வெளியீட்டுக்கு முன்பு இருந்தே எழுந்தன. இதில் சாமி சாமி பாடலில் பாவாடையுடன் நடிகை ராஷ்மிகா மந்தனா மிகவும் கவர்ச்சியாக நடனம் ஆடுவதும், அல்லு அர்ஜுனுடன் காருக்குள் மிக நெருக்கமாக அமர்ந்து காதல் செய்யும் காட்சிகளும், அதில் இடம்பெற்றுள்ள வசனமும் ஆபாசமாக இருப்பதாகவும், இந்த காட்சிகள் பார்வையாளர்களின் முகத்தினை சுழிக்க வைப்பதாகவும் எதிர்ப்புகள் கிளம்பின.

இதனால் பலரும் தம் குழந்தைகளுடன் குடும்பத்தோடு திரைப்படம் பார்க்க வருவதை தவிர்ப்பதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து சர்ச்சையான காட்சிகளை திரைப்படத்தில் இருந்து படக்குழுவினர் நீக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.