சமந்தா, நாகசைதன்யாவின் விவாகரத்துக்கு காரணம் கசிந்தது ; இது தானா காரணம் ?

0

காதல் ஜோடியாக இருந்த சமந்தா மற்றும் நாகசைதன்யா கடந்த 2017 ஆம் வருடம் தமது காதல் பயணத்தில் அடுத்த நகர்வான திருமணம் பந்தத்தில் இணைந்து கொண்டனர்.

இவர்கள் 4 வருடங்கள் தொடர்ந்த இந்த திருமண பயணம் கடந்த அக்டோபர் மாதம் விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக அறிவித்தனர். இது அவர்கள் இருவரின் ரசிகர்களும் மிகப்பெரிய அதிர்ச்சி செய்தியாக அமைந்தது.

இந்நிலையில், தற்போது நாகசைத்தன்யா ஊடகங்களுக்கு கொடுத்த ஒரு பேட்டியில், திரைப்படங்களில் அவர் ஏற்று நடிக்கும் கேரக்டர்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த நாகசைதன்யா, ” நான் நடிக்க எந்த ஒரு படத்தில் ஒப்பந்தமாவதற்கு முன்பும், அந்த கதாபாத்திரமானது என்னுடைய குடும்பத்தையும், அதன் கௌரவத்தையும் பாதித்து விடக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருப்பேன் “.

மேலும் ” அதேபோல், என்னுடைய குடும்பத்தினரை சங்கடப்படுத்தும் படியான கதாபாத்திரத்தில் நான் ஒருபோதும் நடிக்க மாட்டேன் ” என்று பதில் சொல்லியிருந்தார்.

இந்த பதிலின் மூலம் நடிகை சமந்தா சில சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தினை ஏற்று நடித்தது தான் இவர்களின் விவாகரத்துக்கு காரணமோ? என்ற கேள்வியை ஊடகங்களுக்கும் அவரின் ரசிகர்களுக்கும் எழுப்பியிருக்கிறது.