சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டான்’ படத்தின் முதல் பாடல் Jalabulajangu!

0

‘டாக்டர்’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவுள்ள புதிய திரைப்படம் ‘டான்’. இந்த டான் திரைப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் தயாரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இந்திரைப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார்.

இசையமைப்பாளர் அனிருத் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். டான் திரைப்படத்தின் பாடல்கள் உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது. இதனை சோனி நிறுவனமும் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் திரைப்படத்தின் முதல் பாடல் பற்றிய அப்டேட் இன்று (15.12.2021) மாலை 5 மணிக்கு வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டது.

அறிவித்தது போல் டான் படத்தின் முதல் பாடல் ஜலபுலஜங்கு எனும் பாடல் அனிருத் இசையில் லோகேஷ் வரியில் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படக்குழு பிரத்யேக Promo வீடியோவை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பெப்ரவரி 11 ஆம் திகதி கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பூஜையுடன் தொடங்கியது. பின்னர் முதற்கட்டப் படப்பிடிப்பு கொரோனா காரணமாக தடைபட்டிருந்தது. கொரோனா முடக்கம் முடிந்த பின்னர் சமீபத்தில் மீண்டும் பொள்ளாச்சி, ஆக்ரா, சென்னையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைப்பெற்றது. இந்த படத்தின் சூரி, சிவகார்த்திகேயன், எஸ்.ஜே சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகளின் டப்பிங் ஏற்கனவே முடிந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. கடந்த (10.12.2021) அன்று இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக படக்குழு டுவிட்டரில் அறிவித்திருந்தது.

டான் திரைப்படம் வருகின்ற வருடம் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17 ஆம் திகதி சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என நம்பந்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து உத்தியோகப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.