ஓடிடியில் வெளியாகும் ‘அன்பறிவு ‘, அடுத்து ‘மாறன்’?

0

தமிழ் சினிமாவில் தரமான திரைப்படங்களை வழங்கும் ஒரு நிறுவனம் சத்யஜோதி பிலிம்ஸ் ஆகும். இந்நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குனர் அஷ்வின்ராம் இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழா ஆதி, நடிகர் நெப்போலியன், நடிகை காஷ்மிரா பர்தேஷி மற்றும் பலர் நடிக்கும் திரைப்படம் ‘அன்பறிவு’.

கொரோனா காரணமாக இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போய் சமீபத்தில் தான் முடிவடைந்தது. தற்போது திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.

இதற்கு முன்பு ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்து வெளிவந்த ‘சிவகுமாரின் சபதம்’ படம் வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை என்பதால், ‘அன்பறிவு’ திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்திருக்கலாம் என சினிமா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிகை மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்துள்ள ‘மாறன்’ திரைப்படமும் ஓடிடி தளத்தில்தான் வெளியாகும் என இதற்கு முன்பு தகவல் பரவியது. இரண்டு படங்களையும் சேர்த்துத்தான் ஹாட்ஸ்டார் நிறுவனம் பெரிய விலை கொடுத்து ஓடிடி உரிமைகளை வாங்கியுள்ளதாகச் உள்ளக தகவல் சொல்கிறார்கள்.

நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக ஓடிடி தளத்தில் வெளிவந்த ‘ஜகமே தந்திரம்’ திரைப்படமாகும். இதனையடுத்து ‘மாறன்’ படமும் ஓடிடியா என நடிகர் தனுஷ் ரசிகர்கள் இப்போதே தங்கள் வருத்தங்களை வெளிப்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.