புஷ்பா பாடல் சர்ச்சை விவகாரம் : அல்லு அர்ஜூன் அதிரடி பதில்

0

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜூன்,நடிகை ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா.

இது ஐந்து மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் நடிகை சமந்தா நடனமாடியுள்ள ஓ சொல்றியா மாமா பாடல் வரிகள் ஆண்கள் காம எண்ணங்கள் கொண்டவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளதால் குறித்த பாடலுக்கு கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. அதோடு இந்த பாடலுக்கு நடனமாடிய நடிகை சமந்தா மட்டுமின்றி, இந்த பாடலின் பாடலாசிரியர் விவேகா, பின்னணி பாடகி ஆண்ட்ரியா ஆகியோர் மீதும் வழக்குத் தொடரப்படும் என்றும் ஆண்கள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தநிலையில் புஷ்பா திரைப்படத்தின் பிரமோசனுக்காக சென்னை வந்த நடிகர் அல்லு அர்ஜூனிடத்தில் அந்த பாடல் வரிகள் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு, “அந்த பாடல் வரிகள் உண்மை தானே” என்று சிரித்துக் கொண்டே பதில் கொடுத்தார்.

இந்த நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் எஸ்.தாணு புஷ்பா திரைப்படத்தின் ஓ சொல்றியா மாமா பாடலுக்கு சர்ச்சை எழுந்திருந்தாலும் திரைப்படம் வெளியான பிறகு இளைஞர்கள், குழந்தைகளின் தேசிய கீதமாக அகிலமெங்கும் வரும் என்று சொல்லி ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார்.

தயாரிப்பாளர் தாணுவின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆபாச பாடலை நாட்டின் தேசிய கீதத்துடன் ஒப்பிட்டு பேசுவதாக என ஆண்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.