கவர்ச்சி புகைப்படத்துடன் டுவிட்டருக்கு மீண்டும் வந்த ராதிகா

0

பிரபல நடிகையும் தயாரிப்பாளருமான ராதிகா சரத்குமாரின் டுவிட்டர் கணக்கு சில தினங்களுக்கு முன்பு ஹேக் செய்யப்பட்டது. இதை நடிகை ராதிகாவின் மகள் உத்தியோகப்பூர்வமாக தெரிவித்திருந்தார்.

நடிகை ராதிகாவும், குறித்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் அவரின் உத்தியோகப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் தன் டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே அதில் பதிவிடப்படப்படும் பதிவுகள் மற்றும் மெசேஜ்கள் ஆகியவற்றை குறித்து எச்சரிக்கையாக இருக்கவும் கோரியிருந்தார்.

இந்நிலையில் மீண்டும் அவரின் டுவிட்டர் பக்கம் திரும்பி விட்டதாக கூறி கோவாவில் எடுத்துக் கொண்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு டுவிட் பதிவினை பதிவிட்டுள்ளார். குறித்த புகைப்படம் தற்போது டுவிட்டரில் வைரலாகி வருகிறது.