ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தளிக்க வெளியானது வலிமை பட மேக்கிங் வீடியோ

0

நடிகர் அஜித் குமார் நடித்துள்ள ‘வலிமை’ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணியில் உருவாகியுள்ளது வலிமை’ திரைப்படம் ‘.

இந்தத் திரைப்படத்தை வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 13 ஆம் திகதி வெளியிட திட்டமிட்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது நடிகர் அஜித் குமாரின் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக ‘வலிமை’ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.