இன்று மாலை ‘வலிமை’ ஸ்டண்ட் மேக்கிங் வீடியோ ரிலீஸா?

0

நடிகர் அஜித்குமார் நடித்துள்ள வலிமை படத்திற்காக தான் அவரின் கோடிக்கணக்கான ரசிகர்கள் அதிகம் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போதோ தொடங்கிய நிலையில் கொரோனா வைரஸ் பிரச்சனையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

பின்னர் சில நடிகர்கள் மீண்டும் நடிக்க வர முடியாது என கூற படக்குழு பல போராட்டத்தில் இந்த திரைப்படப்பிடிப்பை முடித்துவிட்டார்கள்.

மேலும் திரைப்படத்தின் அப்டேட்டுகள் டிசம்பர் மாதம் நிறைய வரும் என கூறப்பட்ட வந்த நிலையில் இன்று நடிகர் அஜித்குமாரின் ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷ செய்தி வந்துள்ளது.

அது என்னவென்றால் இன்று மாலை வலிமை திரைப்படத்தின் சின்ன புரொமோ வீடியோ ஒன்று வெளியாகும் என கூறப்படுகிறது.