5 மொழிகளில் வெளியாகும் சூர்யாவின் அடுத்த படம்: ரிலீஸ் திகதிஅறிவிப்பு!

0

நடிகர் சூர்யாவின் அடுத்த திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் சூர்யா ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சூர்யாவின் நடிப்பில் “சூரரைப்போற்று” மற்றும் “ஜெய்பீம்” ஆகிய இரண்டு திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்றினை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் “எதற்கும் துணிந்தவன்”என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் “எதற்கும் துணிந்தவன்” படத்தின் புதிய போஸ்டரினை நேற்று வெளியிட்டுள்ளது.

இதில் வருகின்ற வருடம் பெப்ரவரி 4 ஆம் திகதி இந்த திரைப்படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளிலும் குறித்த திரைப்படமானது வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பினை தொடர்ந்து சூர்யாவின் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.