ஆக்சன் கிங் அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி – ரசிகர்கள் அதிர்ச்சி

0

உலகநாயகன் கமல்ஹாசனை தொடர்ந்து ஆக்சன் கிங் அர்ஜூனுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்நிலையில், நடிகர் அர்ஜுனுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து நடிகர் அர்ஜுன் அவரின் உத்தியோகப்பூர்வ இன்ஸ்டகிராம் கணக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், கொரோனா தொற்று உறுதியான நிலையில் வைத்தியர்களின் ஆலோசனைப்படி தற்போது தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவில் தான் தற்போது ஆரோக்கியமாக இருப்பதாகவும் , தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் வைத்திய பரிசோதனை செய்து கொள்ளுமாறும். பொது மக்கள் அனைவரும் மாஸ்க் அணிவதை மறக்க வேண்டாம் என்றும் பதிவிட்டுள்ளார்.