வாத்தி கம்மிங் படைத்த புதிய சாதனை ; ரசிகர்கள் உற்சாகத்தில்

0

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிகை மாளவிகா மோகனன் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான படம் மாஸ்டர்.

கொரோனா லாக்டவுன் முடிவுக்கு பிறகு அதிகம் வசூலித்த முதல் தமிழ் திரைப்படமாக இந்தப் படம் அமைந்தது. இந்த மாஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் என்ற பாடல் திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே இந்திய அளவில் ஹிட் அடித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் இறுதியில் இந்த வாத்தி கம்மிங் பாடல் வீடியோ யூடியுப் தளத்தில் வெளியிட்டார்கள்.

தற்போது இப்பாடல் வெளியிடப்பட்டு 10 மாதங்களில் 300 மில்லியன் பேர் பார்த்திருக்கிறார்கள்.

அந்த வகையில் தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் பாடல் தென்னிந்திய அளவில் மூன்றாம் இடத்தை பிடித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை விஜய் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கொண்டாடி வருகிறார்கள்.