‘புஷ்பா’ படத்தின் சமந்தா பாடலுக்கு திடீர் எதிர்ப்பு: நீதிமன்றத்தில் வழக்கு!

0

பிரபல தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன் நடிப்பில் “புஷ்பா” என்ற படம் வரும் 17 ஆம் திகதி உலககெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார் என்பதும், அந்த பாடலின் லிரிக்கல் வீடியோ நேற்றுக்கு முந்தைய தினம் வெளியானது.

இந்த நிலையில் இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆண்கள் சங்கத்தினர் நீதிமன்றத்தில் இந்த பாடலுக்கு எதிராக வழக்கு தொடுத்து உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பாடலில் ஆண்களை காம எண்ணம் கொண்டவர்களாக மட்டுமே சித்தரித்து எழுதப்பட்டதாகவும், இந்த பாடலை தடை செய்ய வேண்டும் என்றும் ஆந்திர நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

புஷ்பா திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் திடீரென இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதால் இந்த திரைப்படத்தின் படக்குழுவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.