நீச்சலுடையில் ரகுல் பிரீத் சிங்

0

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைபடங்களில் நடித்து முன்னணி நடிகையாக நடிகை ரகுல் பிரீத் சிங் திகழ்கின்றார்.

தமிழில் நடிகர் கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் மூலம் தான் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

இதையடுத்து நடிகர் சிவகார்த்திகேயனுடன் ‘அயலான்’ திரைப்படத்தில் நடித்துள்ளார் ரகுல் பிரீத் சிங். குறித்த அயலான் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

மேலும் தமிழில் உலக நாயகன் கமலின் ‘இந்தியன் 2’ திரைப்படம் மட்டும் கைவசம் வைத்துள்ள நிலையில் தமிழை தவிர தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் போதை பொருள் கடத்தல் கும்பல் தொடர்பான வழக்கில் சிக்கி பொலிஸ் விசாரணை வளையத்துக்குள் இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

தனது உடலை மிகவும் பிட்டாக வைத்துக்கொள்வதில் அதிக ஆர்வம் கொண்ட ரகுல், யோகா செய்யும் புகைப்படங்களை தொடர்ந்து தனது சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றமையை வழக்கமாக கொண்டவர்.

ரகுல், தனது ஸ்டைலான புகைப்படங்களை வெளியிட்டு அவரின் ரசிகர்களை குஷிப்படுத்துவதை தவறாமல் செய்பவர்.

அந்த வகையில் அவர் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, அது தற்போது சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து வைரலாகி வருகிறது.