தளபதி 66வது படம் குறித்து கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட அதிரடி தகவல்!

0

தளபதி விஜய் உடன் பைரவா மற்றும் சர்கார் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இந்நிலையில் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்துள்ள தளபதி விஜய் அடுத்து தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிபள்ளி இயக்கும் தனது 66 ஆவது படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் பெப்ரவரியில் தொடங்கும் என்று சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

மேலும், இந்த படத்தில் தளபதி விஜய் நடிப்பது குறித்து தயாரிப்பார் தில்ராஜூ அறிவித்ததை அடுத்து நடிகை கீர்த்தி சுரேஷ் அப்படத்தில் நாயகியாக நடிப்பதாகவும் ஒரு செய்தி ஊடகங்களில் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் தெலுங்கு ஊடகமொன்றுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் பேட்டி அளித்த போது, விஜய் 66வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறீர்களா? என்று அவரிடத்தில் கேட்கப்பட்டது.

தளபதி விஜய்யின் புதிய படத்தில் நான் நடிக்கவில்லை என்று சொல்லி சில மாதங்களாக ஊடகங்களில் பேசும் பொருளாக இருந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.