லுங்கி டான்ஸ் வீடியோவை வெளியிட்ட சன்னி லியோன்!

0

தமிழில் நடிகர் ஜெய் நடித்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியபடி தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் சன்னிலியோன்.

அதையடுத்து வீரமாதேவி என்ற சரித்திரப் படத்தில் நடிப்பதாக ஒப்பந்தமாகிய நிலையில், அந்த படம் தவிர்க்க முடியாத காரணத்தினால் கைவிடப்பட்டது. இந்நிலையில் தற்போது யுவன் இயக்கத்தில் ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார் நடினை சன்னி லியோன்.

இந்தப் படத்தில் அவருடன் விஜய் டிவி பிரபலமான தர்ஷா குப்தா, நகைச்சுவை நடிகர் யோகிபாபு, ரமேஷ் திலக், சதீஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் ஒரு பாடல் காட்சியை ஒளிப்பதிவு செய்து வருகிறார்கள்.

அதில் சன்னி லியோன் லுங்கி உடையணிந்து நடனமாடுகின்றார். அந்த பாடலில் தான் நடனமாடிய வீடியோ ஒன்றையும் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் சன்னி லியோன். குறித்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.