‘கவின்’ அடுத்து நடிக்கும் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் யார் தெரியுமா?

0

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த நடிகர் கவின் நடித்து சமீபத்தில் வெளியான “லிப்ட்” திரைப்படம் அவரின் ரசிகர்கள் மற்றுமின்றி மக்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் யாவரும் தெரிந்ததே.

இந்நிலையில் நடிகர் கவின் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது இணையவாசிகள் பக்கம் கசிந்துள்ளது. அதாவது நடிகர் ஜீவா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஜிப்ஸி திரைப்படத்தை தயாரித்த கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனத்தின் அம்பேத்குமார் என்பவர் தயாரிப்பில் உருவாகும் திரைப்படத்தில் தான் கவின் நடிக்கவுள்ளார் என்றும் குறித்த படத்தை அறிமுக இயக்குனர் இயக்க இருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் நடிகர் கவின் ஜோடியாக நடிக்கும் நடிகை உள்பட மற்றைய நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் காமெடி மற்றும் ரொமான்ஸ் கதையம்சம் கொண்ட குறித்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஜனவரி முதல் வாரம் தொடங்க தீர்மாணித்துள்ளதாக அறியப்படுகின்றது. மேலும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.