துவங்கியது ரஜினியின் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு.. வெறித்தனமான First லுக் போஸ்டருடன் வெளிவந்த அறிவிப்பு

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தில் சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், தமன்னா ஆகியோர் நடிக்கிறார்கள்.

பிரமாண்டமாக உருவாகவுள்ள இப்படத்தின் அப்டேட் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என நேற்று சன் பிக்சர்ஸ் அறிவித்திருந்தது.

அதன்படி, தற்போது ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது என வெறித்தனமான First லுக் போஸ்டருடன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.