நடிகை சமந்தா பதிவிட்ட தகவல்!
இன்ஸ்டாகிராமில் சமந்தா அவரின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் எடுத்துக்கொண்ட அனைத்து புகைப்படங்களையும் டெலிட் செய்திருந்ததுடன், தற்போது இன்ஸ்டாவில் நாக சைதன்யாவை Unfollow வும் செய்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து நடிகை சமந்தா அவரின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தகவலொன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் ஆங்கிலத்தில், “சில நேரங்களில் உள்ளிருக்கும் பலம் என்பது வெளியில் அனைவரும் பார்க்கக் கூடிய அளவிற்கு தெரியும் பெரிய தீச்சுவாலை அல்ல! சில நேரங்களில் அது, ”தளராமல் போய்க்கொண்டே இரு! சாதித்து விடுவாய்!” என மெல்லிய குரலில் இரகசிக்கும் சிறிய தீப்பொறி ஆகும்!” என என் அன்னை கூறியது என்று #hashtagஇல் பதிவிட்டிருந்தார்.