சமந்தா- நாக சைதன்யா ஜோடி!

நான்கு வருட காதல் திருமண வாழ்க்கைக்கு பிறகு, சமந்தா – நாக சைதன்யா ஜோடி பிரிவதாக அவர்கள் எடுத்த முடிவு கடந்த வருடம் அனைவருக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சமந்தா தனது விவாகரத்துக்கு பிறகு சினிமாவில் தான் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். அவர் தற்போது நடித்து வருகின்ற யசோதா படத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் ஒருவர் இணைந்திருப்பதாக அறிவிப்பு வந்திருப்பதால் சமந்தாவுக்கு அதிகம் சண்டை காட்சிகள் இருக்கும் என தெரிகிறது. மேலும் அவர் விஜய் தேவர்கொண்டா ஜோடியாக ஒரு புது படத்தில் அடுத்து நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் சமந்தா தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவை இன்ஸ்டாகிராமில் unfollow செய்துவிட்டார். ஏற்கனவே அவரது கணக்கில் இருந்த நாக சைதன்யா போட்டோக்கள் அனைத்தையுமே சமந்தா நீக்கி இருந்தார். ஆனால் நாக சைதன்யா சமந்தாவை இன்ஸ்டாகிராமில் இன்னும் follow செய்துக்கொண்டு தான் இருக்கிறார். ஏற்கனவே தனது திருமண சேலையை நாகார்ஜூனா குடும்பத்துக்கு திருப்பி அனுப்பிவிட்ட நிலையில், இப்போது சமூக வலைத்தளங்களில் தனது முன்னாள் கணவரை unfollow செய்து இருக்கின்றார் நடிகை சமந்தா.