AK 62 படத்திற்கு அஜித் வாங்கும் சம்பளம்!

வலிமை படம் கடந்த பிப்ரவரி 24ம் திகதி வெளியாகி இருந்தது. படத்தின் வசூல் ரூ. 200 கோடியை தாண்டிவிட்டதால் படம் வெற்றி பயணத்தை நோக்கி இருக்கிறது.

அடுத்ததாக அஜித்தின் 62வது படத்தில் முதன்முறையாக, அஜித் – விக்னேஷ் சிவன் கூட்டணி அமைக்கிறார்கள்.

நடிகரின் 62 ஆவது படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தான் தயாரிக்கிறார்கள். இந்த படத்தில் நடிக்க அஜித் ரூ. 100 கோடி சம்பளம் கேட்டிருந்த நிலையில், அஜித் கேட்டதை விட 5 கோடி அதிகமாக, மொத்தம் ரூ. 105 கோடி சம்பளம் கொடுக்க முன்வந்துள்ளனராம் லைகா நிறுவனத்தினர்.