விஜய்யின் மாஸ்டர் படம் பற்றி ராஜமௌலி!

இந்தியளவில் பிராலமான முக்கிய இயக்குனர்களில் ஒருவர்தான்  S.S.ராஜமௌலி. இவர் இயக்கத்தில் பல  மெகா ஹிட் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகிa பாகுபலி திரைப்படங்கள் அவருக்கு பிரமாண்ட இயக்குனர் என்ற அங்கீகாரத்தை பெற்று தந்தது. மேலும் அப்படம் இந்தியளவில் பெரிய வசூல் சாதனை செய்த திரைப்படங்களில் ஒன்றாகியும் உள்ளது.

இந்நிலையில் தற்போது ராஜமௌலி இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள RRR திரைப்படம் எதிர்வரும் 25 ஆம் திகதி வெளியாக இருக்கிறது.

அதனால் தற்போது ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் ராஜமௌலி, ராம் சரண், ஜூனியர் NTR ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.  அப்படி அவர் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் கடைசியாக அவர் பார்த்த தமிழ் படங்களில் கவனத்தை ஈர்த்த திரைப்படங்கள் குறித்து கேட்கப்பட்ட போது, “மாஸ்டர் நல்லா இருந்தது, அனிருத் இசை அப்படத்தில் Terrific” பதிலளித்துள்ளார் பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி.