10 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு – வலிமை திரைப்படம்!
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பில்வலிமை திரைப்படம் கடந்த மாதம் வெளியானது.
பெரியளவில் வசூல் சாதனை படைத்த வலிமை படத்தின் வெற்றிக்கு பின், மீண்டும் அஜித் – வினோத் கூட்டணி AK 61 படத்திற்காக இணையவுள்ளனர். ஏற்கனவே இப்படத்திற்காக அஜித் போட்டுள்ள கெட்டப் அனைவரையும் கவர்ந்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் வலிமை திரைப்படத்தை OTT-யில் வெளியிட தடைவிதிக்க கோரி மெட்ரோ திரைப்பட தயாரிப்பாளர் வழக்குத்தொடர்ந்திருந்தார். இருப்பினம் நீதிபதி. மனுதாரரால் பதிப்புரிமை மீறலுக்கு முதன்மையான வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறி, வலிமை திரைப்பட வெளியீட்டு தடை விதிப்பிற்கு மறுப்பு உத்தரவு பிறப்பிட்டிருந்தார்.
மேலும் தற்போது , “அன்றாட செய்திகளின் அடிப்படையிலேயே ‘வலிமை’ உருவானது, 10 கோடி இழப்பீடு கோரி வழக்கு தொடருவேன்” என கூறியுள்ளார் வலிமை பட இயக்குனர் எச்.வினோத்.