சீனாவில் வெளியான கனா!

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் நடிப்பில் வெளியான கனா திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார் அருண்ராஜா காமராஜ்.

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் மட்டுமன்றி படத்தில் கேமியோ ரோலிலும் நடித்து பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது இப்படம்.

இதனிடையே இப்படம் சமீபத்தில் Indian Girl என்ற டைட்டிலில் சீனா மொழியில் டப் செய்யப்பட்டு சீனாவில் வெளியானது.

மேலும்  அங்கு வெளியாகி 6 நாட்கள் ஆகியுள்ள நிலையில் சீன திரையரங்கில் பெரிய வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டு இருக்கிறதாம்.