பீஸ்ட் படத்தின் டீசர் ரிலீஸ் திகதி!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் பீஸ்ட்.

இப்படத்தின் பாடல்கள் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பீஸ்ட் படத்தின் ரிலீஸ் திகதியை தான் அனைவரும் எதிர்பார்த்து வந்தனர். இதனிடையே நேற்று அதிகாரப்பூர்வமாக பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13 ஆம் திகதி திரைக்கு வரும் என அறிவித்து இருந்தனர்.

மேலும் தற்போது ரசிகர்கள் அனைவரும் அப்படத்தின் டீசரை தான் எதிர்பார்த்து வருகின்றனர். அதன்படி பீஸ்ட் படத்தின் டீசர் ஏப்ரல் 1 ஆம் அல்லது 2 ஆம் திகதிகளில் வெளியாக அதிக வாய்ப்பிருப்பதாக தகவல் பரவி வருகின்ற நிலையில், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் வரை காத்திருக்கின்றனர் தளபதி ரசிகர்கள்.