ஏலம் போன ஏ.ஆர். ரகுமான் அணிந்த ஆடை!

ரோஜா படத்தின் மூலம் தனது பயணத்தை தொடங்கி, இப்போதும் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான். யாரிடமும் இல்லாத சிறப்பாக உலகத்தில் இருக்கும் இசைக் கருவிகளை பற்றி ஆராய்ந்து அவற்றை வைத்து புதிய இசையில் பாடல்கள் கொடுப்பார்.

அடுத்து ரகுமானின் இசையில் வெளி வர இருக்கும் பொன்னியின் செல்வன் பட பாடல்களுக்காக ரசிகர்கள் ஆவலாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.

ராஜஸ்தான் காஸ்மோ க்ளப் அறக்கட்டளையில் 28ஆம் ஆண்டு நிறுவன தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏ.ஆர். ரகுமான் பயன்படுத்திய வெள்ளி நிற ஆடை ஏலத்திற்கு விடப்பட்டது.

அதை பிரமோத் சுரடியா என்பவர், 6 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார். இதில் ஏலம் மூலம் வரும் பணம் ஆதரவற்றோருக்கு உதவ பயன்படுத்தப்படும் என தகவல் வெளியாகி வருகின்றது.