“எத்தனை கோடி கொடுத்தாலும் வேண்டாம்: வெளியேறிவிடுவேன்” – சல்மான் கான்

நடிகர் சல்மான் கான் பாலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார். அவர் நடிக்கும் படங்களை தொடர்ந்து 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வருகின்றன.

தற்போது சிரஞ்சீவி நடித்து வரும் காட்பாதர் படத்தில் சல்மான் கான் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார். மலையாளத்தில் மோகன்லால் நடித்த லூசிபர் படத்தின் ரீமேக் தான் இது. அந்த படத்தில் பிரித்விராஜ் நடித்த கெஸ்ட் ரோலில் தான் சல்மான் கான் தெலுங்கில் நடிக்கிறார்.

ஷூட்டிங்கில் சிரஞ்சீவி உடன் சல்மான் இருக்கும் ஸ்டில் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் படுவைரல் ஆகி இருந்தது. தனி ஒருவன் பட புகழ் மோகன் ராஜா தான் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

சல்மான் கான் உச்ச நடிகர் என்பதால் அந்த சின்ன ரோலுக்கே 20 கோடி ருபாய் வரை தர, சிரஞ்சீவியின் மகனும் படத்தின் தயாரிப்பாளருமான  ராம் சரண் முன்வந்திருக்கிறார்.

ஆனால் சல்மான் கான் அந்த பணம் வேண்டாம் என கூறிவிட்டாராம். அதை பெற்றுக்கொள்ளும்படி மேலும் வற்புறுத்தியதால் ”என் படத்தில் உங்களை கெஸ்ட் ரோல் நடிக்க கூப்பிட்டால் நீங்கள் சம்பளம் வாங்குவீர்களா?சம்பளம் வாங்கும்படி வற்புறுத்தினால் படத்தில் இருந்தே வெளியேறிவிடுவேன்” என கூறி மிரட்டினாராம் சல்மான். படத்தை சம்பளம் வாங்காமல் சல்மான் கான் நடித்து கொடுத்திருக்கும் தகவல் தற்போது வைரல் ஆகி வருகிறது.