அஜித் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் பூஜா ஹெக்டே

விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்த பூஜா ஹெக்டே அதையடுத்து சர்க்கஸ், கபி ஈத் கபி தீவாளி ஆகிய ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இதில் கபி ஈத் கபி தீவாளி படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இப்படம் 2014ம் ஆண்டு சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக் ஆகும். இதன் தமிழ் பதிப்பில் தமன்னா நாயகியாக நடித்த ரோலில் நடிக்க பல நடிகைகள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பூஜா ஹெக்டே கமிட்டாகியிருக்கிறார்.

சல்மான் படப்பிடிப்பில் இணைந்ததை மறைமுகமாக சல்மானின் பிரேஸ்லட்டை பூஜா அணிந்து படப்பிடிப்பில் இணைந்ததாக தெரிவித்துள்ளார்.