யோகாவில் அசத்தும் தீபிகா படுகோனே

ஹிந்தியில் சர்க்கஸ், பைட்டர் மற்றும் தெலுங்கில் பிரபாஸ் உடன் இணைந்து புராஜெக்ட் கே போன்ற படங்களில் நடித்து வருகிறார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே.

2018ம் ஆண்டு பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்ட பிறகும் சினிமாவில் பிஸியாக நடித்து வரும் தீபிகா படுகோனேவை இன்ஸ்டாவில் 66 மில்லியன் பேர் பின்தொடருகிறார்கள்.

இந்த நிலையில் தற்போது யோகா செய்யும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் தீபிகா. அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக் மற்றும் கமெண்ட் கொடுத்து வைரலாக்கி வருகிறார்கள்.