பிரீத்தி ஜிந்தாவுக்கு உதவி செய்த ஹிருத்திக் ரோஷன்

ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவரான பிரீத்தி ஜிந்தாவுக்கு சமீபத்தில் வாடகை தாய் மூலம் அமெரிக்காவில் இரட்டை குழந்தை பிறந்துள்ளது.

அதையடுத்து இந்த குழந்தைகளை விமானத்தில் அவர் இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளார், நீண்ட தூர விமான பயணம் என்பதால் இரட்டை குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்கு சிரமப்பட்டுள்ளார்.

அப்போது அதே விமானத்தில் வந்த பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஒரு குழந்தையை தான் வாங்கி வைத்துக் கொண்டு அவருக்கு உதவி செய்திருக்கிறார்.

இதுகுறித்து ப்ரீத்தி ஜிந்தா கூறுகையில் , நமது வாழ்க்கையில் பலர் வருவார் போவார்கள். ஆனபோதிலும் உண்மையாகவே உதவி செய்வது ஒரு சிலர் மட்டுமே.

அந்த வகையில் என்னுடைய குழந்தைகளை நீண்ட நேர விமானப் பயணத்தில் ஹிருத்திக் ரோஷன் அன்போடு கவனித்துக் கொண்டார். அவருக்கு எனது நன்றி என்று சொல்லி அவருடன் எடுத்த ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.