தீபிகா படுகோனின் ஜெகரியான் படம்

தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகியுள்ள வயது வந்தவருக்கான திரைப்படம் ‛ஜெகரியான்’. இந்த திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காது என்பதால், தணிக்கை சான்று தேவைப்படாத ஓடிடி தளத்தில் வெளியிட ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பரவலும் அதிகரித்து வருவதால் ஓடிடி தளத்தில் வெளியாவது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வருகிற பிப்ரவரி மாதம் 11 ஆம் திகதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பெரிய தொகை கொடுத்து அமேசான் நிறுவனம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் தீபிகாவுடன் சித்தார்த் சதுர்வேதி, அனன்யா பாண்டே, தாரிகா கர்வா, நசுருதீன் ஷா, ரஜத் கபூர் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். குஷன் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார், கபீர் காத்பாலியா, இசையமைப்பாளர் சவேரா மேத்தா இசையமைத்துள்ளனர். இயக்குனர் ஷாகுன் பத்ரா இயக்கியுள்ளார்.