கொரோனா விதிமுறைகளை மீறினாரா ஆலியாபட்

0

கொரோனா வைரஸ் பரவலில் பாலிவுட் பிரபலங்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு மிகமுக்கிய காரணம் நடிகர், நடிகைகள் மேற்கொள்ளும் விழாக்கள், விருந்துகள், திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் என எப்போதும் ஒரு கூட்டத்துடனேயே இவர்கள் இருக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.

அதனால் அவர்களை கொரோனா வைரஸ் தொற்று எளிதாக தாக்குகிறது. இதற்காக அவர்களுக்கு பல கட்டுப்பாடுகளும் அதிகமாக இருக்கின்ற நிலையில், இதையும் சில நடிகை மற்றும் நடிகர்கள் மீறிவிடுகிறார்கள்.

நடிகை அலியா பட் நடித்து வரும் இந்தி திரைப்படம் பிரம்மாஸ்த்ரா ஆகும். டில்லியில் நடந்த இந்த திரைப்படத்தின் புரமோசன் நிகழ்ச்சியில் நடிகை ஆலியாபட் மும்பையில் இருந்து சென்று கலந்து கொண்டுள்ளார். மேலும் சமீபத்தில் இடம்பெற்ற பார்ட்டி ஒன்றிலும் நடிகை ஆலியா பட்டும் பங்கேற்றிருந்தார்.

இதில் கலந்த கொண்ட நடிகை கரீனா உள்ளிட்ட ஒரு சிலருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானதையடுத்து நடிகை ஆலியா பட்டும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டதாக செய்தி தகவல் சினிமா வட்டாரத்தில் வெளியானது. இந்த தனிமைப்படுத்துதல் விதிமுறையினை மீறி அவர் மும்பையிலிருந்து டில்லி சென்றதாகவும், அவர் மீது சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த தகவலினை மறுத்துள்ள மும்பை சுகாதாரத்துறை அதிகாரிகள், நடிகை ஆலியா பட் தனிமைப்படுத்தப்படவில்லை, மேலும் நடிகை கொரோனா விதியை மீறவில்லை என தெரிவித்துள்ளனர்.

அவர் விமானத்தில் பயணம் செல்வதற்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்ததாகவும், அதில் அவருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.