2022 எனக்கான ஆண்டு : ரகுல் பிரீத் சிங்

0

தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே ஆகிய திரைப்படங்களில் நடித்த நடிகை ரகுல் பிரீத் சிங் ஆவார். தற்போது பிரீத் சிங் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என கைவசம் 8 திரைப்படங்களுக்கு மேல் வைத்துள்ளார். இதில் ஹிந்தியில் மட்டும் தற்போது ஆறு திரைப்படங்களில் நடிகை பிரீத் சிங் நடித்து வருகிறார்.

அதில் நடிகர் ஜான் ஆப்ரஹாமுடன் இணைந்து நடித்துள்ள அட்டாக், இயக்குனர் அஜய் தேவ்கன் இயக்கத்தில் நடித்து வரும் ரன்வே 34, நடிகர் ஆயுஷ்மான் குரானாவுடன் நடித்து வரும் டாக்டர் ஜி மற்றும் மிஷன் சின்ட்ரெல்லா என நான்கு படங்கள் வரும் 2022 இல் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.

இதுபற்றி நடிகை ரகுல் பிரீத் சிங் ஊடகங்களுக்கு கருத்து கூறும்போது, “கொரோனாவினால் கடந்த இரண்டு ஆண்டுகளாக திரையுலகின் நிலைமையே மாறிப்போய் இருந்தது. தற்போது மீண்டும் வழக்கமான இயக்கத்திற்கு திரையுலகம் மீண்டு வந்துள்ளது. எனது நான்கு திரைப்படங்கள் 2022 இல் அடுத்தடுத்து வெளியாக இருப்பதால் அடுத்த ஆண்டு எனக்கான ஆண்டாக இருக்கும்” என்றார்.