ராதே ஷ்யாம் – இரண்டாவது ஹிந்தி பாடல் வெளியீடு

0

இயக்குனர் ராதாகிருஷ்ணகுமார் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் மற்றும் நடிகை பூஜாஹெக்டே முதன் முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ராதே ஷ்யாம்.

குறித்த படமானது வருகின்ற வருடம் ஜனவரி 14 ஆம் திகதி திரைக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.

ஹிந்தி தவிர மற்ற மொழிகளுக்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள நிலையில், ஹிந்தி பதிப்புக்கு இசையமைப்பாளர் மித்தூன் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் ஒரு பாடல் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில் தற்போது சோச் லியா என்று தொடங்கும் இரண்டாவது ஹிந்தி வீடியோ பாடல் ஒன்றை திரைப்பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

பாடல் வெளியாகி 24 மணிநேரத்தில் இந்த பாடல் 1.2 கோடி பார்வைகளை கடந்துள்ளதோடு, 5.55 லட்சத்திற்கும் அதிகமானபேர் ரசித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.