youthpluz
 Home  |  விமர்சனம்

நம்பியார் படத்தின் திரைவிமர்சனம்!!!

நம்பியார் படத்தின் திரைவிமர்சனம்!!!

எஸ்.எஸ்.ராஜமெளலி, விக்ரமன் ஆகியோரிடம் துணை இயக்குனராக இருந்த கணேஷ் இயக்கத்தில், தொடர் தோல்விகளை சந்தித்து தற்போது வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஸ்ரீகாந்த், சந்தானத்தோடு சேர்ந்து களமிறங்கி இருக்கும் படம் தான் நம்பியார்.

இந்த படமாவது அவருக்கு வெற்றி தருமா என பார்க்கலாம்.

கதை:

படத்தின் பெயரை கேட்டதும் நம் மனதில் தோன்றுவது, வில்லனாக கலக்கிய நடிகர் நம்பியார் தான்.

அதுபோல, இந்த படத்தின் ஹீரோவுக்கும் ஒரு வில்லன், தன் சொந்த மனசாட்சிதான். வழக்கம் போல் இல்லாமல், ஸ்ரீகாந்தின் மனசாட்சியாக வருகிறார் சந்தானம்.

சுனைனாவை பார்த்தவுடன் காதல், பின் மனசாட்சியின் பேச்சை கேட்டு நடப்பதால் பல்வேறு பிரச்சனைகள், அது எப்படி தீர்கிறது என கொஞ்சமும் மூளையை கசக்காமல் சிம்பிளாக கதையை எழுதியுள்ளார் இயக்குனர்.

கிளாப்ஸ்:

இந்த படம் இரண்டு வருடங்களுக்கு முன்பே வெளியாகியிருக்க வேண்டியது என்பதால், குறை கூறும் மனசாட்சியாக சந்தானத்தின் கவுண்டர் வசனங்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றாலும், ரசிக்க வைக்கிறது.

மனசாட்சி என்பதால் ஸ்ரீகாந்த் அணியும் அதே உடை தான் சந்தானத்திற்கும். அதிலும் கொஞ்சம் கிரேட்டிவிட்டியை புகுத்திய இயக்குனருக்கும், காஸ்டியூம் வடிவமைத்த வந்தனா ஸ்ரீகாந்திற்கும் ஒரு பெரிய கிளாப் போடலாம்.

பல்ப்ஸ் :

- சுனைனாவை டூயட்டுக்கு மட்டுமே பயன்படுத்தியுள்ளது.

-விஜய் ஆண்டனியின் பாடல்கள்.

-மெதுவான திரைக்கதை.

மொத்தத்தில் நம்பியார், இன்னும் கொஞ்சம் வில்லத்தனமாக இருந்திருக்கலாம்.

  16 Feb 2017
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பாகுபலி-2 திரைவிமர்சனம்!
அசரவைக்கும் பைரவா சிறப்பு விமர்சனம்!
அச்சம் என்பது மடமையடா விமர்சனம்!!
ரெமோ திரைவிமர்சனம்!
நம்பியார் படத்தின் திரைவிமர்சனம்!!!
தர்மதுரை படத்தின் திரைவிமர்சனம்!!!
நெருப்பாய் தெறிக்கும் கபாலி திரைவிமர்சனம்!!
இப்ப இருக்க ட்ரண்ட்க்கு ஏத்த படம் இது நம்ம ஆளு!!!ஸ்பெஷல் விமர்சனம்!!!
தெறி திரைவிமர்சனம்!!
காதலும் கடந்து போகும் திரை விமர்சனம்