youthpluz
 Home  |  விமர்சனம்

அச்சம் என்பது மடமையடா விமர்சனம்!!

அச்சம் என்பது மடமையடா விமர்சனம்!!

சிம்பு-கௌதம் மேனன் கூட்டணி என்றாலே ஒருவித மேஜிக் கிரியேட் ஆகும். அப்படி ஒரு மேஜிக் தான் விண்ணைதாண்டி வருவாயா. அதன் பிறகு மீண்டும் சிம்பு-கௌதம்-ரகுமான் என கூட்டணி அமைத்த படம் தான் அச்சம் என்பது மடமையடா.
ஆனால், இந்த படம் வருவதற்கு பல தடைகளை கடந்துவிட்டது, கிட்டத்தட்ட மூன்று வருடத்திற்கு முன் தொடங்கிய படம், இத்தனை வருடம் கழித்து வரும் இந்த அச்சம் என்பது மடமையடா மேஜிக்கை கிரியேட் செய்ததா? பார்ப்போம்.
கதைக்களம்
சிம்பு படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி வருகிறார். கிட்டத்தட்ட விண்ணைத்தாண்டி வருவாயா கார்த்திக் போல்.
சிம்பு தங்கையின் தோழியாக மஞ்சிமா சிம்புவின் வீட்டிலேயே தங்கி படிக்கிறார், பிறகு சொல்லவா வேண்டும்? காதல், அரட்டை என ஜாலியாக செல்கிறது.
பிறகு சிம்பு ஒரு ரோட் ட்ரிப் செல்ல, அவருடன் மஞ்சிமாவும் செல்கிறார், ஜாலியாக இவர்கள் ட்ரிப் போக ஒரு லாரி இவர்கள் மீது மோத, சிம்புவின் வாழ்க்கையே தலைகீழாகிறது, பிறகு என்ன நடந்தது என்பதை சுவாரசியமாக காட்டியிருக்கிறார் கௌதம் மேனன்.
படத்தை பற்றிய அலசல்
சிம்பு இஸ் ரியல் கம்பேக் என்று சொல்ல வேண்டும், ஆரம்பத்தில் விடிவி கார்த்திக் போல் கையை ஆட்டுவது, தலையை ஆட்டுவது என இருந்தாலும், பொறுப்பு என்று வந்தவுடன் அவரிடம் வரும் முதிர்ச்சி நடிப்பிலும் நன்றாக தெரிகிறது, இதே மாதிரி படங்களை தேர்ந்தெடுத்து நடிங்க சிம்பு என்று சொல்ல தோன்றுகின்றது.
மஞ்சிமா தமிழுக்கு புதுவரவு, அவரை வைத்து தான் கதையே நகர்கிறது, அதை அவரும் உணர்ந்து நடித்துள்ளார், இதை தவிர நம்மை மிகவும் கவருவது சதீஷ், மொட்டை போலிஸ் ஒருவர்.
கௌதம் படம் என்றாலே காதல், பிறகு ஆக்‌ஷன் என்பது தெரியும், ஆனால், நமக்கு ஆக்‌ஷன் என்ற ஐடியாவே இல்லாத போது நம்மை நோக்கி ஒரு குண்டு வந்தால் என்ன செய்வோம்? என்பதை இரண்டாம் பாதியில் பதட்ட பட வைத்துள்ளார். கொஞ்சம் அவருடைய கமர்ஷியல் எல்லையை மீறியுள்ளார். குறிப்பாக சிம்புவின் பெயரை கிளைமேக்ஸில் சொல்லும் காட்சி தியேட்டரே அதிர்கிறது.
சட்டை காலருக்கும், முடிக்கும் இடையில என்னமோ பண்ணுதுன்ற காதல் வசனமாக இருந்தாலும் சரி, லைஃபில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் அதுக்கு நம்ம ரெடியா இருக்கோமான்னு தான் கேள்வி என்ற உணர்ச்சிப்பூர்வமான வசனமும் சரி கௌதம் சூப்பர்.
படத்தின் இரண்டாவது ஹீரோ ஏ.ஆர். ரகுமான், பாடல்களிலும் சரி, பின்னணியிலும் சரி செம்ம ஸ்கோர் செய்துவிட்டார், ஒளிப்பதிவு நாமே ஒரு ட்ரிப் சென்ற அனுபவம்.
க்ளாப்ஸ்
படத்தின் இரண்டாம் பாதி, விறுவிறுப்பாக செல்கின்றது.
சிம்பு-மஞ்சிமா காதல் காட்சிகள்.
கௌதம் படத்தில் இதுவரை இல்லாத கமர்ஷியல் அம்சம், குறிப்பாக கிளைமேக்ஸ்
பல்ப்ஸ்
முதல் பாதியிலேயே அனைத்து பாடல்களும் வருவது.
சில லாஜிக் மீறல்கள், வழியில் பார்த்தவுடன் சாவி இருக்கா, இல்லையா என்று தெரியவில்லை பைக், கால் டாக்ஸி என சிம்பு எடுத்து ஓட்ட ஆரம்பித்து விடுகிறார்.

சிம்பு-மஞ்சிமா காதல் காட்சிகள்.கௌதம் படத்தில் இதுவரை இல்லாத கமர்ஷியல் அம்சம், குறிப்பாக கிளைமேக்ஸ்

பல்ப்ஸ்

முதல் பாதியிலேயே அனைத்து பாடல்களும் வருவது.

சில லாஜிக் மீறல்கள், வழியில் பார்த்தவுடன் சாவி இருக்கா, இல்லையா என்று தெரியவில்லை பைக், கால் டாக்ஸி என சிம்பு எடுத்து ஓட்ட ஆரம்பித்து விடுகிறார்.

  16 Feb 2017
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 More like this
பாகுபலி-2 திரைவிமர்சனம்!
அசரவைக்கும் பைரவா சிறப்பு விமர்சனம்!
அச்சம் என்பது மடமையடா விமர்சனம்!!
ரெமோ திரைவிமர்சனம்!
நம்பியார் படத்தின் திரைவிமர்சனம்!!!
தர்மதுரை படத்தின் திரைவிமர்சனம்!!!
நெருப்பாய் தெறிக்கும் கபாலி திரைவிமர்சனம்!!
இப்ப இருக்க ட்ரண்ட்க்கு ஏத்த படம் இது நம்ம ஆளு!!!ஸ்பெஷல் விமர்சனம்!!!
தெறி திரைவிமர்சனம்!!
காதலும் கடந்து போகும் திரை விமர்சனம்